சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. மனித வாழ்க்கையில் தேவைப்படுவது _________.
அ) பணம்
ஆ) பொறுமை
இ) புகழ்
ஈ) வீடு
2. சாந்த குணம் உடையவர்கள் _____________ முழுவதையும் பெறுவர்.
அ)புத்தகம்
ஆ) செல்வம்
இ) உலகம்
ஈ) துன்பம்
3. ’மலையளவு’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________.
அ) மலை + யளவு
ஆ) மலை + அளவு
இ) மலையின் + அளவு
ஈ) மலையில் + அளவு
4. ’தன்னாடு’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________.
அ) தன் + னாடு
ஆ) தன்மை + னாடு
இ) தன் + நாடு
ஈ) தன்மை + நாடு
5. இவை + இல்லாது என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் மசொல் __________.
அ) இவையில்லாது
ஆ) இவைஇல்லாது
இ) இவயில்லாது
ஈ) இவஇல்லாது
பொருத்துக.
1. சாந்தம் – அமைதி2. மகத்துவம் – சிறப்பு3. தாரணி – உலகம்4. இரக்கம் – கருணை
குறுவினா
1. இந்த உலகம் யாருக்கு உரியது?
இந்த உலகம் சாந்தம் உடையவருக்கு உரியது.
2. உலகம் நிலைதடுமாறக் காரணம் என்ன?
இந்த உலகம் சாதிகளாலும் கருத்து வேறுபாடுகளாலும் நிலை தடுமாறுகிறது.
3. வாழ்க்கை மலர்ச்சோலையாக மாற என்ன செய்ய வேண்டும்?
மனிதன் நல்ல உள்ளத்தோடு வாழ்ந்தால் அவன் வாழ்க்கை மலர்ச்சோலையாக மாறிவிடும்.
சிறுவினா
சாந்தம் பற்றி இயேசுகாவியம் கூறுவன யாவை?
- சாந்தம் என்னும் அமைதியான பண்பு கொண்டவர்கள் பேறு பெற்றவர்கள். இந்த உலகம் முழுவதும் அவர்களுக்கே உரியது
- அவர்களே தலைவர்கள் ஆவர் என்ற உண்மையை இயேசுநாதர் கூறினார்
- மனித வாழ்க்கையில் தேவைப்படுவது பொறுமை
- அது மண்ணையும் விண்ணையும் ஆட்சி செய்யும் பெருமையுடையது என்றார்.
சிந்தனை வினா
எல்லா மக்களும் ஒற்றுமையாக வாழ என்ன செய்ய வேண்டும்?
- அன்பு அருள் இரக்கம் என்ற மூன்று கொள்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.
- கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும்
- சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற சிந்தனைகளை உயர்த்திப் பிடிக்க வேண்டும்.
- அனைவரிடமும் நல்லிணக்கத்தைப் பேண வேண்டும்.
- தேசிய விழாக்களைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும்
- தேசத் தலைவர்களை மதித்துப் போற்ற வேண்டும்
- தேசப்பற்றை ஊட்டி வளர்க்க வேண்டும்.
- தனக்கென வாழாமல் பிறருக்காக வாழும் தமிழர் அறத்தைப் பின்பற்ற வேண்டும்.
- ஒற்றுமை உணர்வையும் ஒருமைப்பாட்டு உணர்வையும் வளர்க்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக