சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. __________ ஒரு நாட்டின் அரணன்று.
அ) காடு
ஆ) வயல்
இ) மலை
ஈ) தெளிந்த நீர்
2. மக்கள் அனைவரும் __________ ஒத்த இயல்புடையவர்கள்.
அ) பிறப்பால்
ஆ) நிறத்தால்
இ) குணத்தால்
ஈ) பணத்தால்
3. ‘ நாடென்ப’ என்னும் மசொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது_________.
அ) நான் + என்ப
ஆ) நா + டென்ப
இ) நாடு + என்ப
ஈ) நாடு + டென்ப
4. கண் + இல்லது என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் மசொல் _________.
அ) கணிஇல்லது
ஆ) கணில்லது
இ) கண்ணில்லாது
ஈ) கண்ணில்லது
பின்வரும் குறட்பாக்களில் உவமையணி பயின்றுவரும் குறளைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்.
2. வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள் யானையால் யானையாத் தற்று.
3. கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற மிக்காருள் மிக்க கொளல்.
குறுவினா
1. ஒரு செயலைச் செய்ய எவற்றையெல்லாம் ஆராய வேண்டும்?
வேண்டிய பொருள், ஏற்ற கருவி, தகுந்த காலம், மேற்கொள்ளும் செயலின் தன்மை, உரிய இடம் ஆகிய ஐந்தையும் ஐயம் தீர ஆராய்ந்து ஒரு செயலைச் செய்ய வேண்டும்.
2. ஒரு நாட்டுக்கு எவையெல்லாம் அரண்களாக அமையும்?
தெளிந்த நீரம், நிலமும், மலையும், அழகிய நிழல் தரும் காடும் ஆகிய நான்கும் உள்ளதே அரணாகும்.
3. சிறந்த நாட்டின் இயல்புகளாக வள்ளுவர் கூறுவன யாவை?
பெரிய அளவில் முயற்சி இல்லாமல் வளம்தரும் நாடே சிறந்த நாடாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக