ஞாயிறு, 24 ஏப்ரல், 2022

மொழியை ஆள்வோம்

அறிந்து பயன்படுத்துவோம்

சரியான வினாச்சொல்லை இட்டு நிரப்புக.

  1. நெல்லையப்பர் கோவில் _______ உள்ளது?எங்கு
  2. முதலாழவார்கள்_______பேர்?எத்தனை
  3. _______ சொற்களைப் பேச வேண்டும்?எத்தகைய
  4. அறநெறிச்சாரம் பாடலை எழுதியவர்________? யார்
  5. அறநெறிச்சாரம் என்பதன் பொருள்________? யாது

பின்வரும் தொடரைப் படித்து வினாக்கள் எழுதுக.

பூங்கொடி தன் தோழியுடன் திங்கட்கிழமை காலையில் பேருந்தில் ஏறி பள்ளிக்குச் சென்றாள்.
எடுத்துக்காட்டு. பூங்கொடி பள்ளிக்கு எப்படிச் சென்றாள்?

  1. பூங்கொடி யாருடன் பள்ளிக்குச் சென்றாள்?
  2. பூங்கொடி என்ன கிழமையில் பள்ளிக்குச் சென்றாள்?
  3. பூங்கொடி எப்போது பள்ளிக்குச் சென்றாள்?

தலைப்புச் செய்திகளை முழு சொற்றொடர்களாக எழுதுக.

எடுத்துக்காட்டு. தலைப்புச் செய்தி: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடக்கம்-வானிலை மையம் அறிவிப்பு.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

சாலையில் கிடந்த பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த மாணவன்-மாவட்ட ஆட்சியர் பாராட்டு.

சாலையில் கிடந்த பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த மாணவனே மாவட்ட ஆட்சியர் பாராட்டினார்.

தமுக்கம் மைதானத்தில் புத்தகக் கண்காட்சி தொடக்கம் மக்கள்- ஆர்வத்துடன் வருகை

தமுக்கம் மைதானத்தில் புத்தக கண்காட்சி தொடங்கியதை அடுத்து மக்கள் ஆர்வத்துடன் வருகை புரிந்தனர்.

தேசிய அளவிலான கைப்பந்து போட்டி -தமிழக அணி வெற்றி.

தேசிய அளவிலான கைப்பந்து போட்டியில் தமிழக அணி வெற்றி பெற்றது

மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி -ஏழாம் வகுப்பு மாணவி முதலிடம்

மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் ஏழாம் வகுப்பு மாணவி முதலிடம் பிடித்தார்.

மாநில அளவிலான பேச்சுப் போட்டி- சென்னையில் இன்று தொடக்கம்

மாநில அளவிலான பேச்சு போட்டி சென்னையில் இன்று தொடங்குகிறது

கீழ்க்காணும் சொற்களை பெயர்ச் சொல்லாகவும் வினைச் சொல்லாகவும் பயன்படுத்தி தொடர்கள் உருவாக்குக

விதை-
விதைநெல் வாங்கினான்
சோளம் விதைத்தான்

கட்டு-
பணம் கட்டுக் கட்டாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கிறது
புத்தகங்களை ஒன்றாக அடுக்கிக் கட்டினாள்

படி-
கடைக்கு சென்று ஒரு படி அரிசி வாங்கி வா.
ஓரிடத்தில் அமர்ந்து நூலைப்படி

நிலவு-
நிலவு பிரகாசமாக ஒளிர்கிறது
வகுப்பில் அமைதி நிலவியது.

நாடு-
இந்தியா எனது தாய்நாடு ஆகும்
நான் எனது நாட்டை பெரிது நாடுகிறேன்

ஆடு-
எனது வீட்டில் நான்கு ஆடுகள் உள்ளன
பாடலுக்கு ஏற்ப ஆடினேன்.

கலைச்சொல் அறிவோம்

  1. குறிக்கோள்-objective
  2. செல்வம்-wealth
  3. லட்சியம்-ambition
  4. பொதுவுடமை-communism
  5. கடமை-responsibility
  6. அயலவர்-neighbour
  7. வறுமை-poverty
  8. ஒப்புரவு நெறி-reciprocity
  9. நற்பண்பு-courtesy






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக