அணி இலக்கணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அணி இலக்கணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 24 ஏப்ரல், 2022

அணியிலக்கணம் இயல் 8

குறுவினா

உருவக அணியை விளக்குக

உவமை வேறு உவமிக்கப்படும் பொருள் வேறு என்று இல்லாமல் இரண்டும் ஒன்றே என்பது தோன்றும்படி கூறுவது உருவக அணியாகும்.
எடுத்துக்காட்டு:
வையம் தகளியா வார்கடலே நெய்யாக 
வெய்ய கதிரோன் விளக்காகச் -செய்ய சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை 
இடராழி நீங்குகவே என்று.

இப்பாடலில் பூமி அகல்விளக்காகவும் கடல் நெய்யாகவும் கதிரவன் சுடராகவும் உருவகப் படுத்தப்பட்டுள்ளன. எனவே,
 இப்பாடல் உருவக அணி அமைந்ததாகும்.

உருவக அணிக்கும் ஏகதேச உருவக அணிக்கும் உள்ள வேறுபாடு யாது?

  • உவமை வேறு உவமிக்கப்படும் பொருள் வேறு என்று இல்லாமல் இரண்டும் ஒன்றே என்பது தோன்றும்படி கூறுவது உருவக அணியாகும்.
  • உருவகப் படுத்தப்படும் பொருள்களில் ஒன்றை உருவகப்படுத்தி மற்றொன்றை உருவகப் படுத்தாமல் விடுவது ஏகதேச உருவக அணி ஆகும்.

கற்பவை கற்றபின்

உவமைத் தொடர்களை எழுதி அவற்றை உருவகங்களாக மாற்றுக.

  1. மலர் போன்ற முகம்-முகமலர்
  2. தேன் போன்ற தமிழ்-தமிழ்த்தேன்
  3. மலர் போன்ற பாதம்-பாதமலர்
  4. தாமரை போன்ற முகம்-முகத் தாமரை
  5. மதி போன்ற முகம்-முகமதி
  6. கயல் போன்ற விழி-விழிக்கயல்
  7. முத்துப் போன்ற வியர்வை-வியர்வை முத்து
  8. முத்துப் போன்ற பல்-பல்முத்து
  9. வெள்ளம் போன்ற இன்பம்-இன்பவெள்ளம்
  10. கடல் போன்ற துன்பம்-துன்பக் கடல்.



வியாழன், 21 ஏப்ரல், 2022

அணி இலக்கணம்

குறுவினா

1) உவமை, உவமேயம், உவம உருபு விளக்குக.

உவமை: ஒப்பிட்டுக் கூறப்படும் பொருள் 

உவமேயம்: உவமையால் விளக்கப்படும் பொருள்

உவம உருபு: 'போல' என்னும் பொருள் தரும் சொல் 



உவமை அணிக்கும் எடுத்துக்காட்டு உவமை அணிக்கும் இடையே உள்ள வேறுபாடு யாது?

உவமை அணி: உவமை, உவமேயம் ஆகிய இரண்டிற்கும் இடையே உவம உருபு வெளிப்படையாக வருவது உவமை அணி ஆகும்.

எடுத்துக்காட்டு உவமையணி: உவமை, உவமேயம் ஆகிய இரண்டிற்கும் இடையே உவம உருபு மறைந்து வருவது எடுத்துக்காட்டு உவமை அணி ஆகும்.


கற்பவை கற்றபின்

பின்வரும் தொடர்களில் உள்ள உவமை, உவமேயம், உவம உருபு ஆகியவற்றைக் கண்டறிந்து எழுதுக.