சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. காயிதேமில்லத் _______பண்பிற்கு உதாரணமாகத் திகழ்ந்தார்.
அ) தண்மை
ஆ) எளிமை
இ) ஆடம்பரம்
ஈ) பெருமை
2. 'காயிதே மில்லத்' என்னும் அரபுச் சொல்லுக்குச் _______ என்பது பொருள்.
அ) சுற்றுலா வழிகாட்டி
ஆ) சமுதாய வழிகாட்டி
இ) சிந்தனையாளர்
ஈ) சட்ட வல்லுநர்
3. விடுதலைப் போராட்டத்தின்போது காயிதேமில்லத் _______ இயக்கத்தில் கலந்துகொண்டார்.
அ) வெள்ளையனே வெளியேறு
ஆ) உப்புக் காய்ச்சும்
இ) சுதேசி
ஈ) ஒத்துழையாமை
4. காயிதே மில்லத் தமிழ்மொழியை ஆட்சிமொழியாக்க வேண்டும் என்று பேசிய இடம் _______.
அ) சட்டமன்றம்
ஆ) நாடாளுமன்றம்
இ) ஊராட்சி மன்றம்
ஈ) நகர் மன்றம்
5. ’எதிமரொலித்தது’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______.
அ) எதிர் + மரொலித்தது
ஆ) எதில் + ஒலித்தது
இ) எதிர் + ஒலித்தது
ஈ) எதி + ரொலித்தது
6. முதுமை+மொழி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் மசொல் _______.
அ) முதுமொழி
ஆ) முதுமைமொழி
இ) முதியமொழி
ஈ) முதல்மொழி
குறுவினா
1. விடுதலைப் போராட்டத்தில் காயிதே மில்லத் அவர்களின் பங்கு பற்றி எழுதுக.
கல்வியை விட நாட்டின் விடுதலையை மேலானது என்று கருதி ஒத்துழையாமை இயக்கப் போராட்டத்தில் பங்கு பெற்றார்
2. காயிதே மில்லத் அவர்கள் தன் குடும்பத்திலும் எளிமையைக் கடைப்பிடித்தார் என்பதற்குச் சான்றாக உள்ள நிகழ்வை எழுதுக.
காயிதே மில்லத் அவர்கள் தனது மகனின் திருமணத்தை எவ்வித ஆடம்பரமும் இல்லாமல் மிக எளிமையாக மணக்கொடை பெறாமல் நடத்தினார்.
சிறுவினா
ஆட்சி மொழி பற்றிய காயிதே மில்லத்தின் கருத்தை விளக்குக.
- இந்தியா விடுதலை பெற்ற பிறகு நாட்டின் ஆட்சி மொழியைத் தேர்ந்தெடுப்பது தொடர்பான கூட்டம் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.
- இந்தக் கூட்டத்தில் பேசிய பலரும் மிகுதியான மக்கள் பேசும் மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என்றனர்.
- சிலர், பழமை வாய்ந்த மொழியை ஆட்சி மொழியாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தனர்.
- மிகவும் பழமையான மொழி என்றால் அது தமிழ் மொழிதான். மிகவும் இலக்கியச் செறிவு கொண்ட மொழி தமிழ்தான். எனவே தமிழ் மொழியை நாட்டின் ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என்று காயிதேமில்லத் குறிப்பிட்டார்.
சிந்தனை வினா
நீங்கள் ஒரு தலைவராக இருந்தால் எத்தகைய மக்கள் நலப்பணிகளைச் செய்வீர்கள்?
- ஏழ்மையை ஒழிக்கும் நலத்திட்டங்களை நிறைவேற்றுவேன்.
- அனைவருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும்படி செய்வேன்
- அனைவருக்கும் கல்வி திட்டத்தை நடைமுறைப்படுத்துவேன்
- அனைவருக்கும் சுகாதாரமான குடிநீர் உணவு இருப்பிட வசதிகளை செய்து தருவேன்.
- சுற்றுச்சூழல் மேம்பாட்டு திட்டங்களில் கவனம் செலுத்துவேன்
- வனங்களையும் வனவிலங்குகளையும் பாதுகாப்பேன்.
- பள்ளி வயதுக் குழந்தைகள் அனைவருக்கும் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை வழங்கிடுவேன்.
- அனைத்து பள்ளிகளையும் அரசு பள்ளிகளாக மாற்றுவேன்.
- அனைவருக்கும் வீடு திட்டத்தை நடைமுறைப்படுத்தவேன்
- ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கிடுவேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக