ஞாயிறு, 24 ஏப்ரல், 2022

ஆகுபெயர்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 

1. பொருளின் பெயர் அதன் உறுப்புக்கு ஆகி வருவது ______. 
  1. பொருளாகு பெயர் 
  2. சினையாகு பெயர் 
  3. பண்பாகுபெயர் 
  4. இடவாகு பெயர் 
2. இந்த வேலையை முடிக்க ஒரு கை குறைகிறது என்பது ______. 
  1. முதலாகு பெயர் 
  2. சினையாகு பெயர் 
  3. தொழிலாகு பெயர் 
  4. பண்பாகுபெயர் 
3. மழை சடசடவெனப் பெய்தது. – இத்தொடரில் அமைந்துள்ளது ______. 
  1.  அடுக்குத்தொடர் 
  2.  இரட்டைக்கிளவி 
  3.  தொழிலாகு பெயர் 
  4.  பண்பாகுபெயர் 
4. அடுக்குத் தொடரில் ஒரே சொல் ______ முறை வரை அடுக்கி வரும். 
  1. இரண்டு  
  2. மூன்று 
  3. நான்கு  
  4. ஐந்து

குறுவினா

1. ஒரு பெயர்ச்சொல் எப்போது ஆகுபெயர் ஆகும்? 
ஒன்றன் பெயர் அதனைக் குறிக்காமல் அதனோடு தொடர்புடைய வேறு ஒன்றிற்கு ஆகி வருவது ஆகுபெயர் எனப்படும்.

2. இரட்டைக் கிளவி என்பது யாது? சான்று தருக.
இரட்டையாக இணைந்து வந்து பிரித்தால் தனிப்பொருள் தராத சொற்களை இரட்டைக்கிளவி என்பர்.

சிறுவினா 

1. பொருளாகு பெயரையும் சினையாகு பெயரையும் வேறுபடுத்துக. 
  • பொருளின் பெயர் சினைக்கு ஆகி வருவது பொருளாகு பெயர் எனப்படும்
  • சினையின் பெயர் பொருளுக்கு ஆகி வருவது சினையாகு பெயர் எனப்படும்.


2. இரட்டைக்கிளவி, அடுக்குத்தொடர் - ஒப்பிடுக.
  1. இரட்டையாக வந்து பிரித்தால் தனிப்பொருள் தராத சொற்களை இரட்டைக்கிளவி என்பர்.
  2. சொற்கள் விரைவு, அச்சம், சினம் போன்ற காரணங்களால் இரண்டு, மூன்று, நான்கு முறை அடுக்கி வருவது அடுக்குத்தொடர் ஆகும்.

கற்பவை கற்றபின்

1. பள்ளி நூலகத்திலிருந்து நூல் ஒன்றை எடுத்துவந்து அந்நூலில் ஆகுபெயர்களாக இடம் பெற்றுள்ள பெயர்ச்சொற்களைத் தொகுக்க.


2. அன்றாடப் பேச்சு வழக்கில் இடம்பெறும் அடுக்குத்தொடர், இரட்டைக்கிளவி ஆகியவற்றைத் தொகுக்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக