டி கே சி குறிப்பிடும் திருநெல்வேலிக் கவிஞர்கள் பற்றிய செய்திகளைத் தொகுத்து எழுதுக.
திருநெல்வேலிச் சீமையும் கவிகளும்
- பாரதியார் எட்டையபுரத்தில் பிறந்தவர்.
- கவிமணி தேசிக விநாயகனார் நாஞ்சில் நாட்டில் பிறந்தவர்.
- வெங்கடேஸ்வர எட்டப்ப ராசாவைப் பற்றிப் பாடிய கடிகைமுத்துப் புலவரும் எட்டையபுரத்தில் பிறந்தவர்.
- 'முக்கூடற்பள்ளு' சீவலப்பேரி உழவர்களின் வாழ்க்கையைப் பாடும் நூல் ஆகும்.
- பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் நெல்லையப்பரைப் பற்றிப் பாடியுள்ளார்.
- 'பிள்ளைப் பெருமாள்' என்னும் புலவர் ஸ்ரீவைகுண்டத்துப் பெருமாளைப் பற்றிப் பாடியுள்ளார்
- ஆழ்வார்திருநகரியில் பிறந்த நம்மாழ்வார் 'திருவாய்மொழி'' பாடியுள்ளார்.
- கொற்கைப் புலவர் 'முத்தொள்ளாயிரம்' பாடியுள்ளார்
- நமச்சிவாயப் புலவர் காயல்பட்டணத்துச் சீதக்காதியைப் பற்றிப் பாடியுள்ளார்
- அருணகிரிநாதர் திருச்செந்தூரில் 'திருப்புகழ்' பாடியுள்ளார்
- அண்ணாமலையார் கழுகுமலையில் 'காவடிச்சிந்து' பாடியுள்ளார்
- அழகிய சொக்கநாதர் சங்கரன்கோவில் அம்பாள் 'கோமதித் தாயைப்' பற்றிப் பாடியுள்ளார்
- திருக்கருவை வெண்பா அந்தாதி, பதிற்றுப்பத்தந்தாதி, கலித்துறை அந்தாதி ஆகியவை கரிவலம்வந்தநல்லூர் பற்றிய நூல்கள் ஆகும்.
- திருஞானசம்பந்தரும் மாணிக்கவாசகரும் 'குற்றாலம்' குறித்துப் பாடியுள்ளனர்.
- திரிகூடராசப்பக் கவிராயர் 'குற்றாலக் குறவஞ்சி' பாடியுள்ளார்.
கற்பவை கற்றபின்
உங்களுக்குப் பிடித்த கவிதை ஒன்றைப்பற்றி வகுப்பறையில் கலந்துரையாடுக
நம்பிக்கை
மணம் தரும்...
வண்ணப் பூக்கள்
நிறம் தரும்...
நிறமில்லை என்று
வெள்ளைப் பூ
வாழ்வை வெறுப்பதில்லை...
மணமில்லை என்று
வண்ணப்பூ
வசைபாடுவதில்லை...
உன்னிடம் ஏதோ
ஒன்று உள்ளது...
நம்பிக்கை கொள்...
பூவாய்ப் பூக்கதான் பிறந்தாய்...
புன்னகையை ஏன் மறந்தாய்?
தவம்
கூட்டுப் புழுவின் தவம்
வண்ணச்சிறகிற்காக...
சிப்பியின் ரணம்
முத்திற்காக...
கரியின் செதுக்கல்
வைரத்திற்காக...
பொன்னின் உருகல்
சுடர் ஒளிக்காக...
உளியின் வலி
அழகு சிலைக்காக...
நீ மட்டும்
வலி பொறுக்காதது ஏன்???
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக