வியாழன், 21 ஏப்ரல், 2022

விருந்தோம்பல்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1) மரம் வளர்த்தால்_________பெறலாம்.
  1. மாறி
  2. மாரி
  3. காரி
  4. பாரி

2) நீருலையில் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது_______
  1. நீரு+உலையில்
  2. நீர்+இலையில்
  3. நீர்+உலையில்
  4. நீரு+இலையில்

3) மாரி+ஒன்று என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
  1. மாரியொன்று
  2. மாரிஒன்று
  3. மாரியின்று
  4. மாரியன்று

குறுவினா


1) பாரி மகளிரின் பெயர்களை எழுதுக.
  1. அங்கவை 
  2. சங்கவை

2) 'பொருள் ஏதும் இல்லாத வீடுகளே இல்லை'-எவ்வாறு?
மழையின்றி வறட்சி நிலவிய காலத்திலும் பாரிமகளிர், பாணர்களுக்கு உலைநீரில் பொன் இட்டுத் தந்தனர். இதனால் 'பொருள் ஏதும் இல்லாத வீடுகளே இல்லை' எனலாம்.

3) தமிழர்களின் பிற பண்பாட்டுக் கூறுகளை எழுதுக.
  1. ஈகை
  2. வீரம்
  3. வாய்மை
  4. ஒழுக்கம்
  5. வணிக அறம்
  6. இல்வாழ்க்கை
  7. நட்பு
  8. கல்விச் சிறப்பு
  9. செங்கோல் ஆட்சி
  10. அறம் கூறு அவையம்

கற்பவை கற்றபின்

வள்ளல்கள் எழுவரின் பெயர்களைத் தொகுத்து எழுதுக
  1. அதியமான்
  2. பாரி
  3. காரி
  4. ஓரி
  5. ஆய்
  6. நள்ளி
  7. பேகன்

விருந்தோம்பல் பண்பை விளக்கும் கதை ஒன்றை அறிந்து வந்து வகுப்பறையில் கூறுக.

விருந்தோம்பல்

ஒரு காட்டில் ஒரு மரத்தில் ஜோடிப் புறாக்கள் வாழ்ந்து வந்தன. அன்று பெய்த கடும் மழையில் பெண்புறா நனைந்து, கீழே விழுந்தது. மழையில் நனைந்து நடுங்கியவாறே அங்கு வந்த வேடன் பெண் புறாவைக் கையில் எடுத்துக் கொண்டான்.

ஆண்புறா, பெண்புறாவைத் தேடி அலைந்தது. ஆண்புறாவின் அழுகுரல் கேட்ட பெண்புறா, "நம்மிடம் அடைக்கலமாக வந்த வேடனுக்கு விருந்தளிப்பது நமது கடமை. அதனால் நான் வேடனுக்கு விருந்தாகப் போகிறேன். நீ வேறு ஒரு துணையைத் தேடிக் கொள்" என்றது. 

உடனே ஆண்புறா, வேடன் முன்பாக வந்தது. "எங்களிடம் அடைக்கலமாக வந்த உனக்கு உதவி செய்வது எங்கள் கடமை. உனக்கு என்ன உதவி வேண்டும்? கேள்" என்றது. வேடன்,"என்னுடைய குளிரைப் போக்க வேண்டும்" என்றான் . உடனே ஆண்புறா, விறகுக் குச்சிகளைக் கொண்டுவந்து போட்டது; நெருப்பைப் பற்ற வைத்தது; வேடனின் குளிரைப் போக்கியது. வேடனிடம் "வேறு என்ன வேண்டும்?" என்று ஆண்புறா கேட்டது. வேடன்,"எனக்குப் பசிக்கிறது" என்றான்.  உடனே ஆண்புறா, "விருந்தினரை உபசரிப்பது எங்கள் கடமை. எனவே, நான் இந்த நெருப்பில் விழுந்து உனக்கு உணவாகப் போகிறேன்" என்றது.  வேடன், இச்செயலைத் தடுக்க முயன்றான். அதற்குள் ஆண்புறா நெருப்பில் விழுந்தது. 

பறவைகளை வேட்டையாடி உண்ணும் வேடனான தனக்குப் புறாக்கள் செய்த உதவியை எண்ணினான்; மனம் வருந்தினான். இதனைப் பார்த்துக்கொண்டிருந்த பெண்புறாவும் நெருப்பில் விழுந்தது. மிகவும் மனம் வருந்திய வேடன் திருந்தினான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக