சனி, 26 ஆகஸ்ட், 2023

கொன்றைவேந்தன்

  1. ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் 
  2. ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் 
  3. மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம் 
  4. வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம் 
  5. போகாத இடம்தனிலே போக வேண்டாம் 
  6. போக விட்டுப் புறம் சொல்லித் திரிய வேண்டாம் 
  7. நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம் 
  8. நஞ்சுடனே ஒரு நாளும் பழக வேண்டாம் 
  9. நல்லிணக்கம் இல்லாரோடு இணங்க வேண்டாம் 
  10. அஞ்சாமல் தனிவழியே போக வேண்டாம் 
  11. அடுத்தவரை ஒரு நாளும் கெடுக்க வேண்டாம் 
  12. மனம் போன போக்கெல்லாம் போக வேண்டாம் 
  13. மற்றானை உறவு என்று நம்ப வேண்டாம் 
  14. தனம் தேடி உண்ணாமல் புதைக்க வேண்டாம் 
  15. தருமத்தை ஒருநாளும் கெடுக்க வேண்டாம் 
  16. சினந்தேடி அல்லலையும் தேட வேண்டாம் 
  17. சினந்து இருந்தார் வாசல் வழிச் சேர வேண்டாம்
  18. கற்றவரை ஒருநாளும் பழிக்க வேண்டாம்
  19. குற்றம் ஒன்றும் பாராட்டித் திரிய வேண்டாம்
  20. கொலை களவு செய்வாரோடு இணங்க வேண்டாம்
  21. கொற்றவனோடு எதிர்மாறு பேச வேண்டாம்
  22. கற்புடைய மங்கையரைக் கருத வேண்டாம்
  23. கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்
  24. வாழாமல் பெண்ணை வைத்து திரிய வேண்டாம்
  25. மனையாளைக் குற்றம் ஒன்றும் சொல்ல வேண்டாம்
  26. தாழ்வான குலத்துடனே சேர வேண்டாம்
  27. தாழ்ந்தாரைப் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
  28. வாய் சொல்வார் வாய் பார்த்துத் திரிய வேண்டாம்
  29. மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்
  30. மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்
  31. முன்கோபக் காரரோடு இணங்க வேண்டாம்
  32. வழிபறித்துத் திரிவாரோடு இணங்க வேண்டாம்
  33. கருதாமல் கருமங்கள் முடிக்க வேண்டாம்
  34. சேராத இடம் தனிலே சேர வேண்டாம்
  35. செய்த நன்றி ஒருநாளும் மறக்க வேண்டாம்
  36. ஊரோடும் குண்டுணியாய் திரிய வேண்டாம்
  37. உற்றாரை உதாசீனங்கள் சொல்ல வேண்டாம்
  38. பேரான காரியத்தைத் தவிர்க்க வேண்டாம்
  39. பிணை பட்டுத் துணை போகித் திரிய வேண்டாம்
  40. மண் நின்று மண் ஓரம் சொல்ல வேண்டாம்
  41. மனம் சலித்துச் சிலிக்கிட்டுத் திரிய வேண்டாம்
  42. கண் அழிவு செய்து துயர் காட்ட வேண்டாம்
  43. காணாத வார்த்தைகளை கட்டுரைக்க வேண்டாம்
  44. புண்படவே வார்த்தைகளைச் சொல்ல வேண்டாம்
  45. புறம் சொல்லித் திரிவாரோடு இணங்க வேண்டாம்
  46. மறம் பேசித் திரிவாரோடு இணங்க வேண்டாம்
  47. தெய்வத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம்
  48. இறந்தாலும் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்
  49. ஏசலிட்ட உற்றாரை நந்த வேண்டாம்
  50. கூறாக்கி ஒரு குடியைக் கெடுக்க வேண்டாம்
  51. கொண்டை மேல் பூத்தேடி முடிக்க வேண்டாம்
  52. தூறாக்கித் தலையிட்டுத் திரிய வேண்டாம்
  53. துர்ச்சனராய்த் திரிவாரோடு இணங்க வேண்டாம்
மாணவர்கள் மனனம் செய்து மனத்தில் இருத்த வேண்டிய நீதிகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக