சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. “இடர் ஆழி நீங்குகவே” – இத்தொடரில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்_____.
அ) துன்பம்
ஆ) மகிழ்ச்சி
இ) ஆர்வம்
ஈ) இன்பம்
2. ‘ஞானச்சுடர்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது __________.
அ) ஞான + சுடர்
ஆ) ஞானச் + சுடர்
இ) ஞானம் + சுடர்
ஈ) ஞானி + சுடர்
3. இன்பு + உருகு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _________.
அ) இன்புஉருகு
ஆ) இன்பும்உருகு
இ) இன்புருகு
ஈ) இன்பருகு
பொருத்துக.
1. அன்பு -தகளி
2. ஆர்வம் -நெய்
3. சிந்தை -இடுதிரி
4. ஞானம் -விளக்கு
குறுவினா
1. பொய்கையாழ்வாரும் அகல்விளக்காக எவற்றை உருவகப்படுத்துகின்றனர்?
பொய்கையாழ்வார் பூமி்யை அகல்விளக்காகவும், பூதத்தாழ்வார் அன்பையே அகல்விளக்காகவும் உருவகப்படுத்துகின்றார்
2. பொய்கை ஆழ்வார் எதற்காகப் பாமாலை சூட்டுகிறார்?
பொய்கை ஆழ்வார் தனது துன்பக் கடல் நீங்க வேண்டிப் பாமாலை சூட்டுகிறார்.
சிறுவினா
பூதத்தாழ்வார் ஞானவிளக்கு ஏற்றும் முறையை விளக்குக.
ஞானத்தமிழ் பயின்ற பூதத்தாழ்வார் அன்பையே அகல் விளக்காகவும் ஆர்வத்தையே நெய்யாகவும் இனிமையால் உருகும் மனத்தையே இடுதிரியாகவும் கொண்டு, ஞான ஒளியாகிய சுடர் விளக்கை மனமுருக திருமாலுக்கு ஏற்றினார்.
சிந்தனை வினா
பொய்கை ஆழ்வார் ஞானத்தை விளக்காக உருவகப்படுத்துகிறார். நீங்கள் எவற்றையெல்லாம் விளக்காக உருவகப்படுத்துவீர்கள்?
பொய்கை ஆழ்வாருக்கு ஞானம் விளக்காக இருக்கிறது.
எனக்கு,
- நான் கற்கும் கல்வியே விளக்கு.
- கல்வி ஞானத்தைக் கற்பிக்கும் ஆசிரியர் எனக்கு விளக்கு.
- அகிலம் காக்கும் அன்பு விளக்கு.
- சச்சரவுகள் தீர்க்கும் சமத்துவம் விளக்கு.
- உலகம் போற்றும் வாய்மை விளக்கு.
- உன்னத நெறி ஒழுக்கம் விளக்கு.
- வாழ்வுக்கு உரம் தரும் அறம் விளக்கு.
பன்னிரு ஆழ்வார்களின் பெயர்களைத் திரட்டுக.
- பொய்கை ஆழ்வார்
- பூதத்தாழ்வார்
- பேயாழ்வார்
- திருமழிசை ஆழ்வார்
- நம்மாழ்வார்
- மதுரகவியாழ்வார்
- குலசேகர ஆழ்வார்
- பெரியாழ்வார்
- ஆண்டாள்
- தொண்டரடிப்பொடி ஆழ்வார்
- திருமங்கை ஆழ்வார்
- திருப்பாணாழ்வார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக