சிறுவினா
பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் நான்கினை விளக்குக.
பேச்சு மொழி
- சொற்கள் பெரும்பாலும் குறுகி ஒலிக்கும்
- உணர்ச்சிக் கூறுகள் அதிகமாக இருக்கும்
- உடல்மொழியும் குரல் ஏற்றத்தாழ்வும் கருத்தை எளிதில் உணர வைக்கும்.
- பிழைகளைத் திருத்திக்கொள்ள வாய்ப்பு இல்லை.
எழுத்து மொழி
- சொற்கள் முழுமையாக எழுதப்படும்
- உணர்ச்சிக் கூறுகள் குறைவு
- உடல் மொழி, குரல் ஏற்றத் தாழ்வு போன்றவற்றிற்கு எழுத்து மொழியில் இடமில்லை
- பிழைகள் ஏற்பட்டால் திருத்திக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது.
கிளை மொழிகள் எவ்வாறு உருவாகின்றன?
- ஒரே மொழியைப் பேசும் மக்கள் வெவ்வேறு இடங்களில் வாழ்வதும் உண்டு.
- அவர்களின் மொழிகளில் படிப்படியாக மாற்றங்கள் ஏற்படும்.
- நீண்ட காலத்திற்குப் பிறகு அம்மாற்றங்கள் மிகுதியாகி, அவை புதிய மொழிகளாகப் பிரியும். அப்புதிய மொழிகளைக் கிளைமொழிகள் என்பர்.